Home Forums Agriculture Farming சோற்று கற்றாழை சாகுபடி முறைகள்

2 replies, 1 voice Last updated by  India Garden 1 year, 9 months ago
  • India Garden
    Keymaster
    @india-garden
    #15119

    சோற்று கற்றாழை சாகுபடி முறைகள்

    சோற்றுக் கற்றாழை

    சோற்றுக் கற்றாழை ஒரு தரிசு நிலப்பயிராகும். மழை குறைவான பகுதியில் விவசாயம் சரியான அளவில் நடைபெற முடியாத நிலையில் மூலிகைப் பயிரான சோற்றுக் கற்றாழை பெருமளவில் பயிரிடப்படுகிறது.

    சோற்றுக் கற்றாழை அதிகளவில் தரிசுநிலப் பகுதிகளிலேயே பயிரிடப்படுகிறது. ஆஸ்துமா, குடல் புண், உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கு கற்றாழை ஒரு நல்ல மருந்தாகும். இதன் தோல்பகுதியை சீவி எடுத்து, மோர், பாலில் கலந்து குடித்து வந்தால் நோய்கள் குணமாகும். இது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது.

    இதுதவிர மூலிகை சோப்பு, ஷாம்பு, மருந்து, மாத்திரைகள் தயாரிக்க மூலப்பொருளாகவும் பயன்படுகிறது. இதனால் வெளிமாநிலங்களுக்கு பெருமளவில் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    சோற்றுக் கற்றாழையை வாழை சாகுபடியில் பக்க வாழையை எடுத்து நடுவது போன்றே பயிரிட வேண்டும். மூன்று அடிக்கு ஒன்று என்ற விகிதத்தில் சோற்றுக் கற்றாழையை நடலாம். பத்து நாள்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும்.

    இடைவெளி பயிர் செய்திருப்பதால் நீரை எடுத்துச் சென்று சோற்றுக் கற்றாழைக்கு விடலாம். சொட்டுநீர் பாசனம் இந்த பயிருக்கு உகந்தாகும்.

    சோற்றுக் கற்றாழை செழித்து வளர்ந்தால் கீற்றுகள் ஒவ்வொன்றும் 300 கிராம் முதல் 1 கிலோ எடை வரை பருமனாக இருக்கும். 1 கிலோ எடையுள்ள கீற்று ரூ.4 முதல் 5 வரை விற்பனையாகிறது.

    களைகள் அதிகம் தேங்கவிடாமல் பார்த்துக் கொண்டால் உரம் போடத் தேவையில்லை. ஓரளவு சாண உரம் இட்டால் போதும். ஒரு முறை சோற்றுக் கற்றாழை நட்டால் ஓராண்டுக்கு பலன் கொடுக்கும். 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை அதன் கீற்றுகளை மட்டும் அறுவடை செய்யலாம்.

    இது வெய்யில் காலத்துக்கு ஏற்ற பயிராகும். மருத்துவக் குணம் மிக்க சோற்றுக் கற்றாழைக்கு பூச்சி மருந்து அடிக்கத் தேவையில்லை. தண்ணீர் வசதியில்லாத கரடுமுரடான இடங்கள், பாறைகள் சூழ்ந்துள்ள இடங்கள் சுண்ணாம்பு பாறைகள் சூழ்ந்துள்ள பகுதிகளில் கூட சோற்றுக் கற்றாழை நன்றாக வளரும். இந்த சோற்றுக் கற்றாழை விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக பலன் கொடுக்கும் பயிராக உள்ளது.

    இந்தியாவில் ராஜஸ்தான், ஆந்திரம், குஜராத், தமிழ்நாட்டில் சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இது பெருமளவில் பயிரிடப்படுகிறது.
    3 வகை கற்றாழை

    குர்குவா கற்றாழை, கேப் கற்றாழை, சாகோட்ரின் கற்றாழை என கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் பயிரிடப்பட்டு வருவது குர்குவா கற்றாழை.
    வறட்சிப் பிரதேசங்கள் மற்றும் கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் அடி உயர மலைபிரதேசங்களிலும் இது பயிரிடப்படுகிறது. இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்து பச்சை நிறத்தில், 30 முதல் 60 செ.மீ. நீளமாக சிறிய முட்களுடன் இருக்கும்.
    தரிசுமண், மணற்பாங்கான நிலம், பொறைமண் போன்றவை இதற்கு ஏற்றது. எனினும் எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணற்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.

    நடவு

    தாய்ச்செடியில் இருந்து ஒன்று அல்லது இரண்டு வயதுடைய பக்கக்கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும். ஒரே அளவுள்ள கன்றுகளை தேர்ந்தெடுத்தல் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும்.
    கற்றாழையை தனிப்பயிராக பயிரிடும்போது ஹெக்டேருக்கு 10 ஆயிரம் கன்றுகள் தேவைப்படும். இப்பயிரை வருடத்துக்கு இரண்டு பருவங்களில் பயிரிடலாம். ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம். இலைகள் முற்றும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்க வேண்டும். இதனால் இலையில் தரமான கூழ் கிடைக்கும்.
    நிலத்தை இரணடு முறை உழுது, ஹெக்டேருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும். செடிகள் வாளிப்பாக வளர்வதற்கு செடிகளுக்கிடையே 3 அடி இடைவெளி விட்டு நடவேண்டும்.
    இப்பயிருக்கு ரசாயன உரங்கள் தேவைக்கேற்ப இட வேண்டும். வளமான நிலங்களுக்கு தொழு உரம் இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணுக்கு செடிகளை நட்ட 20-வது நாளில் ஹெக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து இடுவது அவசியம். ஹெக்டேருக்கு 120 கிலோ ஜிப்சத்தை அடியுரமாக இடுவது அவசியம். இதனால் கூழ் அதிக அளவில் கிடைக்கும்.
    கற்றாழையில் அதிக பூச்சித் தாக்குதல், நோய்கள் தோன்றுவதில்லை.
    நீர்த் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படும். இதற்கு நிலத்தில் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

    அறுவடை

    நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து, இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவபடுத்துவதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
    ஹெக்டேருக்கு 15 டன் கற்றாழை இலை கிடைக்கும். இலைகளில் 80 முதல் 90 சதவீதம் நீர் உள்ளதால் விரைவாக கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து கூழை பிரித்தெடுக்க வேண்டும்


    மருத்துவக் குணங்கள்:

    கோடைகாலம் வந்துவிட்டாலே, எல்லோருக்கும் ஒருவிதப் பயம் வந்து ஒட்டிக்கொள்ளும். எப்படித்தான் இந்த வெயிலை சமாளிக்க போகிறோமோ என்ற மன அழுத்தமும் ஏற்படும் இதற்கு இயற்கை கொடுத்திருக்கும் பல அரிய மூலிகைகளை துணையாகக் கொண்டோமானால் பயப்படத் தேவையில்லை.
    வெயிலாவது, மழையாவது எதையும் ஊதித் தள்ளலாம். சாதாரணமாக எங்கும் காணப்படக்கூடிய `கற்றாழை’ ஏகப்பட்ட சக்திகளை தன்னுள்ளே கொண்டுள்ள ஓர் இயற்கை மூலிகை என்பது பலருக்கும் ஆச்சர்யத்தைத் தரும்! வெயில் காலத்தில் வெப்ப சரீரமான பித்த உடம்பே அதிகம் பாதிக்கப்படுகிறது. வெயில் பாதிப்பிலிருந்து நம்மைக் காக்கவும், உடல் வெப்பத்தைப் போக்கவும் கற்றாழை பயன்படுகிறது.
    கற்றாழையில் கருங்கற்றாழை, செங்கற்றாழை, பெருங்கற்றாழை, சிறுகற்றாழை என பலவகைகள் உள்ளன. பச்சையாக உள்ள சோற்றுக் கற்றாழை பலவகையில் உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. கற்றாழை என்றாலும், சோற்றுக் கற்றாழை என்றாலும் ஒன்றுதான்.
    கோடைக்காலத்தில் உருவாகக் கூடிய நீர்கடுப்பு, நீர்தாரை எரி¢ச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, சோற்றுக் கற்றாழை உள்ள நுங்கு (சோறு) போன்ற கலவையை எடுத்து சுத்தமான நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பிறகு அதற்குச் சமமான அளவில் பனங்கற்கண்டினை அத்துடன் சேர்த்து காலை, மாலை இருவேளைகளிலும் உண்டு வரவேண்டும். இதனால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.
    வெயில் காலத்தில் சிலருக்கு கண்களில் எரிச்சல் உண்டாகி, கண்கள் சிவந்து விடும். அப்போது, கற்றாழையின் ஒரு துண்டை எடுத்து அதன் நுங்குப் பகுதி வெளியே தெரியும்படி இரண்டாகப் பிளந்து, கண்களை மூடி கண்களின் மீது அந்தத் கற்றாழை துண்டை வைத்துக்கொண்டு சற்று நேரம் அப்படியே படுத்திருக்க வேண்டும். இப்போது கண் எரிச்சல், குறைவதோடு, சிவந்த நிறமும் மறைந்து விடும். இதை இரவு நேரங்களில் தூங்குவதற்குமுன் செய்து வந்தால் நல்ல உறக்கம் வருவதோடு, உடலுக்கு பல நன்மைகளும் கிடைக்கும்.
    நீர்க்கடுப்பு, வயிற்றின் எரிச்சல் உள்ள சமயங்களில் கற்றாழைச் சோற்றுடன் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் அவை குணமாகும். சிலருக்கு தூங்கி எழுந்ததும் பாதத்தின் அடியில் நெருப்பை மிதித்ததுபோல, எரிச்சலாக இருக்கும். இதைப்போக்க இரவு படுக்கும்முன் கற்றாழையின் நுங்குபோன்ற சோற்றை பாதத்தின் அடியில் தடவிக் கொண்டு படுக்கலாம். பாத எரிச்சல் குறைவதோடு, பாத வெடிப்புகளும் குணமாகும்.
    உடல் எப்போதும் கோழி வயிறுபோல சூடாக இருப்பவர்களும் தேகத்தில் தோல் எரிச்சலாக இருக்கிறது என உணர்கிறவர்களும் சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும், உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் இந்த எண்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வரலாம்.
    இதனால் நல்ல உறக்கம், மனப் பதட்டம் குறைந்து அமைதியும் உடல் நலமும் கிடைக்கும். வாரம் இருமுறை இந்த எண்ணெய்யை உடலுக்குத் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுவதோடு, உடல் வனப்பும் ஏற்படும். இந்த சோற்றுக் கற்றாழைத் தைலம் அல்லது எண்ணெய் நாம் வீட்டிலேயே தயாரிக்கலாம்.
    கற்றாழை ஜெல்லை (சோறு) சுத்தமான நீரில் 7 முறை கழுவி சுத்தம் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உங்கள் இளமை என்றும் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். உடலில் கஸ்தூரி மணம் வீசும். சருமம் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும். கற்றாழை ஜெல்லை பசு மோரில் கலந்து குடித்து வர உடல் சூட்டினால் முகத்தில் வரும் பருக்கள், வெயிலினால் தோலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கருந்திட்டுக்கள் மறைந்து போகும். இதன் ஜெல்லை முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் முகம் அப்பழுக்கில்லாத பளிங்கு போல் ஜொலிக்கும். கற்றாழை மடலைக் கீறி சாறெடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் கலந்து 40 நாள் வெயிலில் வைத்து இதை தலைக்கு தொடர்ந்து தேய்த்து வாருங்கள். தலைமுடி நன்கு செழித்து வளரும்.
    சோற்றுக் கற்றாழையின் சோறு 10 முறை கழுவியது 1 கிலோ, விளக்கெண்ணெய் 1 கிலோ, பனங்கற்கண்டு அரை கிலோ, வெள்ளை வெங்காயச் சோறு அரை கிலோ ஆகியவற்றைக் கலந்து சிறு‌ந்தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி இரண்டுவேளை 15 மில்லியளவு குடித்துவர மந்தம், வயிற்று வலி, பசியின்மை, குன்மக் கட்டி, ரணம், புளியேப்பம், பொருமல் ஆகியவை குணமாகும்.
    இதும‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் பெரும் ஏப்பம், பசியின்மை, குன்மம், தண்டு வலி, வயிற்றுப் பொருமல், அடிவயிறு வீக்கம், மலச்சிக்கல், நரம்புச் சூடு தணியும்.
    இதே எண்ணெயை 5 மில்லி அளவு (1 தேக்கரண்டி) 2 வேளை குடித்து காரம், புளி உள்ள உணவு வகைகளை நீக்கி சாப்பிட்டு வர மேக நோய் பலவீனமாகும்.
    எரிச்சல், நீர்க்கசியும் கிரந்தி, அரிப்பு, தினவு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் நீர் ஒழுகுதல், தாது இழப்பு, அரையாப்பு, தொடைக்கட்டி, அக மற்றும் புற உறுப்புகளில் உள்ள இரணங்கள், சீழ் வடிதல், மலச்சிக்கல், குணமாகும்.

  • India Garden
    Keymaster
    @india-garden
    #15121

    சோற்று கற்றாழை

    முன்னுரை

    கற்றாழை வறட்சியான பகதிகளில் வளர்ப்பதற்கேற்ற ஒரு மருந்துச் செடி ஆகும். உன்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுகின்றது. வறட்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக விளங்கும். கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவை தாயாகமாகக் கொண்டது. மேலும் கிரீஸ், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா,தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையான வளர்கின்றது. இந்தியாவில் ஆழ்வார் (ராஜஸ்தான்), சட்நாபள்ளி (அந்திரா), ராஜபிப்லா (குஜராத்), சேலம் மற்றும் தூத்துக்குடி (தமிழ்நாடு) ஆகிய நாடுகளில் சாகுபடி செய்யப்படுகின்றது.

    கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” எனப்படும் “கூழ்” சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்திய பிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது. இருப்பினும், தரம் வாய்ந்த கற்றாழைக்கூழ், எடுப்பதற்கு தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள், குர்குவா தீவுகள், இந்தியா ஆகிய நாடுகளில் வணிக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது.

    பயன்கள்

    கற்றாழையின் இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்” அதாவது “கூழ்” சருமத்திற்கு பாதுகாப்பதாக கருதப்படுகிறது. சூரிய ஒளியுடன் கலந்து வரும் கடும் வெப்பத்தை ஏற்படுத்தும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை காத்து சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. இதனால் வணிக ரீதியாக அதன் “கூழி” உலகெங்கிலும் சரும் லோசன், சவரம் செய்வதற்கான க்ரீம், ஷாம்பூ ஆகியவற்றால் சேர்க்கப்படுகின்றது.

    கற்றாழையின் மருந்து மகத்துவத்தை கி.பி. 17 ஆம் நூற்றாண்டிலேயே ஆப்பரிக்கர்கள் கண்டறிந்து உலகத்துக்கு அறியப்படுத்தினர்.
    கற்றாழையின் இலையில் ‘அலோயின்’ ்அலோசோன்’ போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. ‘அலோயின்’ வேதிப்பொருளின் அளவு நான்கிலிருந்து இருபத்து ஐந்து சதம் வரை இதன் இலையில் காணப்படுகிறது.
    சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுகின்றது.

    இரகங்கள்

    கற்றாழையில் மூன்று வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. அவை
    1. குர்குவா கற்றாழை – அலோ பார்படென்ஸ் (Aloe vera)
    2. கேப் கற்றாழை – அலோ பெராக்ஸ் (Aloe ferox)
    3. சாகோட்ரின் கற்றாழை – அலோ பெர்ரி (Aloe perryi)

    இவற்றில் முதல் இரண்டு வகைகள் “பார்பலோயின்” (Barbaloin) மற்றும் “அலோ எமோடின்”ஆகிய வேதிப்பொருட்களுக்காக சாகுபடி செய்யப்படுகின்றது. இவற்றின் “ஜெல்” “முசபார்” எனும் மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு வலி நிவாரணியாக உபயோகப்படுத்தப்படுகின்றது. கேப் கற்றாழை கால்நடைகளின் மருத்துவத்தில் பயன்படுகின்றது.

    கற்றாழையில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை மற்றும் நேட்டல் கற்றாழை, ஜஃபராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தது. இவற்றின் “கூழ்” கண்ணாடி போனறு அழகிய தோற்றத்தையும் மருத்துவத் தன்மையும் இருப்பதாக கருதப்படுகின்றது.
    இந்தியாவில் அலோ பார்படன்சிஸ் (அலோ வீரா) நாடு முழுவதும் காணப்படுகின்றது. இது வறட்சியான சூழ்நிலையில் கடல் மட்டத்திருலிருந்து 1000 அடி உயரம் வரை உள்ள மலைப்பிரதேசங்களில் வளர்கின்றது.
    இதன் இலைக்ள தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்த பச்சை நிறத்தில் 30 முதல் 60 செ.மீ நீளமாகவும், சிறிறய முட்டைகளுடன் இருக்கும். செடிகள் நட்ட இரண்டாவது வருடத்தில் தான் பூக்கும். செடிகளில் பூக்கள் தோன்றினாலும் மகரந்தங்கள் செயலிழந்த இருப்பதால் காய் மற்றும் விதைகள் பிடிப்பதில்லை. இதனால் கற்றாழையை பக்கக் கன்றுகள் மூலமாகத் தான் பயிர்ப்பெருக்கம் செய்யவேண்டும்.

    தரிசு மண், மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. எனினும் எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். காரத்தன்மை 7 முதல் 83.5 வரை உள்ள மண் வகைகளில் கற்றாழை வளர்கின்றது. நல்ல வடிகால் வசதியுடன் கூடிய மணங்பாங்கான நிலம் மிகவும் ஏற்றது.
    மண் மற்றும் தட்பவெப்பநிலை

    வறட்சியான தட்பவெப்பத்தில் அதாவது 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளர்கின்றது. எனினும் 25 முதல் 45 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் வணிக ரீதியாக பயிர் செய்யலாம். தமிழ்நாட்டில் இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்யலாம்.

    விதையும் விதைப்பும்

    தாய்ச்செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்ட மாத வயதுடைய பக்க்க கன்றுகளைப்பிரித்து பயன்படுத்தவேண்டும். ஒரே அளவிலள்ள பக்கக் கன்றுகளைத் தேர்ந்து எடுப்பது மிகவும் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும். பக்கக் கன்றுகளை பிரித்ததும் அவற்றின் வேரை கார்பன்டாசிம் கரைசலில் (லிட்டருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் மருந்து) ஐந்து நிமிடத்திற்கு நனைத்தபிறகு நடுவதால் அழுகல் நோய் வராமல் பாதுகாக்கலாம். கற்றாழையை தனிப்பயிராக சாகுபடி செய்யும்போது எக்டருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும்.

    விதைக்கும் பருவம்

    கற்றாழையை வருடத்திற்கு இரண்டு பருவங்களில் அதாவது ஜுன் – ஜுலை மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம். இலைகள் முதிர்ச்சி பெறும் தருவாயில் ஓரளவு வறட்சியான தட்பவெப்பம் இருக்கவேண்டும். இதனால் இலையில் தரமான “கூழ்” கிடைக்கும். இதற்காக செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது நல்லது.

    நிலம் தயாரித்தல்

    நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10 டன் தொழு எரு இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்கவேண்டும். செடிகள் வாளிப்பாக வளர்வதற்காக செடிக்குச் செடி மூன்று அடி இடைவெளி விட்டு நடவேண்டும். மலைச் சரிவுகளின் குறுக்காக சிறிய பார்களை அமைத்து பாரின் மேல் அடிப்பகுதியில் பக்கக்கன்றுகளை நடவு செய்யவேண்டும்.

    ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

    கற்றாழைச் செடிகளுக்க இராசயன உரங்கள் தேவைக்கேற்ப இடவேண்டும். வளமான நிலங்களுக்கு தொழு எரு இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு செடிகளை நட்ட 20வது நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து உரத்தை இடுவது அவசியம். எக்டருக்கு 120 கிலோ உரத்தையும் அடியுரமாக இடுவது நல்லது. இதனால் அதிகளவு “கூழ்” மகசூல் கிடைக்கும்.

    நீர் நிர்வாகம்

    கற்றாழையை மானாவாரிப் பயிராக பயிர் செய்ய ஏற்றது. மஹாராஷ்டிர மாநிலத்தில் இப்பயிரை வருடம் முறை சாகுபடி செய்கின்றன. கோடைக்காலத்தில் பயிர் செய்ய அதன் மொத்த் பயிர் காலத்ததில் அல்லது ஐந்து நீர்ப்பாசனம அளிக்கின்றன.

    ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

    கற்றாழையில் அதிக பூச்சி நோய் தோன்றுவதில்லை. நிர் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படும். நிலத்தில் வடிகால் வசதியை இலையில் அதிகளவு அலோயின் (Aloin) வேதிப்பொருள் காணப்படும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து, இலைகளை ஆறு மணிநேரத்திற்குள் பக்குவப்படுத்துவதற்கு எடுத்துச் செல்லவேண்டும்.

    மகசூல்

    எக்டருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாகக் கிடைக்கும். இலையில் 80 முதல் 90 சதம் நீர் உள்ளதால் விரைவாக கெட்டுவிடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து “கூழ்” (Gel) யை பிரித்தெடுக்கவேண்டும்.

  • India Garden
    Keymaster
    @india-garden
    #15122

    சோற்றுக் கற்றாழை வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மானாவாரி மூலிகை பயிராகும். தமிழ்நாட்டில் மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. வணிக ரீதியான இதன் கூழ் உலகெங்கிலும் சரும லோசன், சவரன் செய்வதற்கான கிரீம், ஷாம்பு ஆகியவற்றில் சேர்க்கப்டுகிறது. கற்றாழைச்சாறு சத்துமிகு பானமாகவும், குடல்புண் நோய்க்கு மருந்தாகவும் பயன்படுகிறது. 25 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உள்ள வெப்பமண்டல பகுதிகளில் வணிக ரீதியாக பயிர் செய்யப்படுகிறது. தாய்ச் செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்கக் கன்றுகளைப் பிரித்து நடவுக்கு பயன்படுத்த வேண்டும். ஒரே அளவிலுள்ள பக்கக் கன்றுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும். கற்றாழையை தனிப்பயிராக சாகுபடி செய்யும்போது எக்டருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும்.

    சோற்றுக் கற்றாழை இலைகளை நட்ட ஒரு ஆண்டிலிருந்து செடியின் அடிப்பகுதியில் உள்ள முதிர்ந்த இலைகளை மட்டும் தனியாக வெட்டி எடுத்து அறுவடை செய்யலாம். பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து இலைகளை அறுவடை செய்யலாம். மானாவாரி சாகுபடி மூலம் எக்டருக்கு 18 முதல் 20 டன் இலைகளை விளைச்சலாக பெறலாம்.

    சோற்றுக் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட மூலிகை குளிர்பானம். அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்க பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

    சோற்றுக் கற்றாழை எண்ணற்ற மருத்துவ பண்புகளைக் கொண்டது. இதனை முக்கிய பயிராக சாகுபடி செய்வதற்கு, பதப்படுத்தும் நிறுவனங்களின் உடன்பாட்டோடு ஒப்பந்த சாகுபடியை மேற்கொள்வது மிகவும் அவசியம். இலையில் கூழ் எடுத்து பதப்படுத்தும் நிறுவனங்களின் உடன்பாட்டோடு ஒப்பந்த சாகுபடியை மேற்கொள்வது மிகவும் அவசியம். இலையிலட கூழ் எடுத்து பதப்படுத்தும் தொழில்நுட்பங்களை நன்றாக தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் வெளி சந்தையில் கற்றாழை இலையை விற்பனை செய்வது மிகவும் கடினம்.

    மூலிகைச் செடிகளை வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் தூத்துக்குடி, சிவகாசி, மதுரை ஆகிய இடங்களில் உள்ளன. வறட்சியைத் தாங்கி வளரும் இயல்புடைய மூலிகைப் பயிர்களை தேவைக்குத் தகுந்தாற் போல குறிப்பாக ஒப்பந்த முறையில் சாகுபடி செய்யுமாறு விவசாயிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

    ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

You must be logged in to reply to this topic.