Category Archives: Agriculture

‘கஜா’ புயலால் சாய்ந்த தென்னை மரங்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்: நிரூபித்துக் காட்டிய வேளாண் நிபுணர்

தென்னை மீட்டெடுக்கும் வழிமுறை. சென்னையை அச்சுறுத்திய கஜா புயல் திசை மாறி, டெல்டா மாவட்டங்களில் கோரத் தாண்டவமாடிச் சென்றுவிட்டது. ஈரமற்ற அதன் தடயம் சாய்ந்துகிடக்கும் தென்னைகளிலும் வாழைகளிலும் தெரிகிறது. தங்களின் பல்லாண்டு கால உழைப்பையும் சேமிப்பையும் பறிகொடுத்த விவசாயிகள் நெஞ்சுக்கூடே காலியானது போல உணர்கின்றனர். தஞ்சாவூரைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் இருந்த லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வீழ்ந்துள்ளன. பேராவூரணி, ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகள் இதில் பிரதானம். இயற்கைச் சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. அதனால்…

நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விதைகள் 40% மானியத்தில் விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுத் தோட்ட முறையில் , காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், வீட்டுத்தோட்ட காய்கறி விதை, தளைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு, 25 ரூபாய் மதிப்புடைய உயர் விளைச்சல் தரும் பீர்க்கன், தக்காளி, வெண்டை, முருங்கை, தட்டைப்பயிர், மிளகாய் மற்றும் அவரை ஆகிய காய்கறிகளில், ஏதாவது ஐந்து காய்கறி விதைகள் 40 சதவீதம் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பயனாளியும், அதிகபட்சமாக, ஆறு காய்கறி தளைகள் வரை பெறலாம்.…

சுத்தமாக பால் கறப்பது எப்படி?

  பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன. எனவே பால் ஒரு சரிவிகித உணவு எனச் சொல்லலாம். அப்படிப்பட்ட பாலை நல்ல முறையில் அதன் சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்யப்பட வேண்டும்.      அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால் பாலின் மூலம் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப் போக்கு முதலிய நோய்கள் வரக் கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்காகப் பெருகி பாலின் தரத்தையும் கெடுத்து விடும். பாலையும் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. ஏனெனில், கிருமிகள் வெகு விரைவாக…

பறவைகளை விரட்டும் எளிய தொழில்நுட்பம்!

Protecting crops from birds using technology விவசாயத்தில் பூச்சிகளின் தாக்குதலால் ஏற்படும் சேதத்தைவிடப் பறவைகளால் ஏற்படும் சேதம் மிக அதிகம். குறிப்பாக, மானாவாரி விவசாயத்தில் பறவைகளால் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்துவருகிறார்கள் விவசாயிகள். இந்த நிலையில் எளிய தொழில்நுட்பம் மூலமாகப் பறவைகளை விரட்டி வருகிறார் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மானாவாரி விவசாயி காமராஜா. தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலச்செக்காரக்குடி கிராமத்தில் விவசாயம் செய்துவருகிறார் காமராஜா. ஓர் உச்சி வெயில் நேரத்தில்…

ஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை

இயற்கை உரம் தயாரிப்பு முறை நான்கடி அகலம், ஆறடி நீளம், மூன்றடி ஆழத்தில் அருகருகே 10 குழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இக்குழி ஒரு டன் கழிவுகளைக் கொள்ளும் அளவில் இருக்கும். 750 கிலோ தாவரக்கழிவுகள், 250 கிலோ கால்நடைக் கழிவுகள் ஆகியவற்றை எடுத்து நன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். 36 லிட்டர் தண்ணீரில் 38 மில்லி இ.எம் ஊற்றி நன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். இ.எம் கிடைக்காத நிலையில் ஒரு கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை 36 லிட்டர் தண்ணீரில்…

ஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக மோரிங்கா ஆயில்

Moringa Oil ஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக மோரிங்கா ஆயில் எனும் பெயரில் சந்தைக்கு வந்துள்ளது. இது ஆலிவ் ஆயிலை விட 15 மடங்கு விலை அதிகமுள்ள சூப்பர் புட்! அமெசானில் 100 மிலி மொரிங்கா ஆயில் 470 ரூபாய்க்கு கிடைக்கிறது. 240 கிராம் மொரிங்கா பவுடர் அமெசானில் 250 ரூபாய்க்கு கிடைக்கிறது. அதென்ன மோரிங்கா ஆயில்? நம்ம ஊரு முருங்கைக்காய்தாங்க! இதன் விஞ்ஞானப் பெயர், மோரிங்கா ஒலிஃபெரா என்பதாகும். இந்த மோரிங்கா எண்ணெய், பவுடர்னு வாங்குறதை விட…

வளம் தரும் வாத்து

வாத்து வாத்து வளர்ப்பின் நன்மைகள் வாத்து இனங்கள் கொட்டில் முறையில் வாத்து வளர்ப்பு தீவன பராமரிப்பு கூஸ் வாத்து அடிப்படை தகவல்கள் கூஸ் வகைகள் Duck Breeders List வாத்து வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் வாத்துகள் உள்ளன. மொத்த முட்டை உற்பத்தியில் 6 முதல் 7 சதவீதம் வரை வாத்துகள் பங்களிக்கின்றன. தற்பொழுது பரவலாக நாட்டு வகை வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு…

கூட்டின மீன்வளர்ப்பு

கூட்டின மீன்வளர்ப்பு மீன்குஞ்சுகளை இருப்பு செய்தல் உணவிடுதல் குளங்களின் பராமரிப்பு மீன் பிடித்தல் கூட்டின மீன்வளர்ப்பு குளங்களில் மாறுபட்ட உணவு, இடம், உயிரிவளி ஆகியவற்றைப் போட்டியில்லாமல் பயன்படுத்தும் பல்வேறு இன மீன் குஞ்சுகளை ஒரே குளத்தினில் இருப்பு செய்து வளர்த்தெடுப்பது கூட்டின மீன் வளர்ப்பு முறையாகும். இதன்படி நான்கு முதல் ஆறு வகையான மீன் இனக்குஞ்சுகளையும், நன்னீர் இறாலையும் தேர்வு செய்து குளங்களில் இருப்பு செய்து வளர்ப்பதன் மூலம் மொத்த உற்பத்தியினை பெருக்கலாம். கூட்டின மீன்வளர்ப்பில் குளத்தில்…

விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி?

விவசாய கடன் பயிர்க்கடன் பெற தகுதி? கடன் பெறுவது எப்படி? எவ்வளவு கடன் கிடைக்கும்? விளிம்பு தொகை வட்டி எவ்வளவு? திரும்ப செலுத்தும் முறை விவசாய கடன் இந்தியாவின் முதுகெழும்பு விவசாயத்தில் தான் இருக்கிறது என்பர். பல்வேறு வகையான தொழில்களுக்கு தேவைப்படுவது போலவே வேளாண்மை தொழிலுக்கும் மூலதனம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. விவாசயிகள் தங்கள் கடன் தேவைகளை பல வழிகளில் பூர்த்தி செய்து வருகின்றனர். முதன்முதலாக விவசாயிகளுக்கு வங்கி கடன் என்பது கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள்…

சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியம்

  சொட்டு நீர் பாசன வசதி யார், யார் மானியம் பெறலாம்? சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சொட்டு நீர் பாசன வசதி சிறு, குறு விவசாயிகள் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதற்கு இதுவரை இருந்த பரப்பு வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தாங்கள் விரும்பும் பரப்பு முழுமைக்கும் 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து பயன் பெறலாம். நாளுக்கு நாள் நீர்த்தேவை அதிகரித்து வரும் நிலையில், சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி, வருங்காலத்…